கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

Photo of author

By Divya

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

பரிகாரம் 01:

தினமும் காலை 6 மணிக்கு தொடர்ந்து 21 நாட்கள் இதை செய்து வரவும்.

யாருக்கு கடன் இருக்கின்றதோ அவரது கையில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்துக் கொண்டு 27 முறை அவர்கள் தலையில் சுற்றி சுற்ற வேண்டும்.

இந்தப் பரிகாரம் அவர்கள் தங்களாகவே செய்து கொள்ள வேண்டும். அதாவது அவர்களாகவே சுற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதைப் பறவைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் (மொட்டை மாடியில் ஒரு கிண்ணத்தில் வைத்து விடவும்).

பின்பு முகம், கை, கால்களை கழுவவும். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ‘என் கடன் தீர வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே சுற்றவும்.

இந்தப் பரிகாரம் கர்மா விலகி பல வழிகளில் வருமானத்திற்கு வழி வகுத்து கடனை அடைக்க உதவும்.

பரிகாரம் 02:

திருமஞ்சனப் பவுடர், பன்னீர், பச்சைக் கற்பூரம் – இவை மூன்றையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அரை கிளாஸ் பன்னீர், அரை ஸ்பூன் திருமஞ்சனப் பவுடர், சிறிது கல் உப்பு, 3 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம்(தூள் செய்தது) அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

யாருக்கு கடன் உள்ளதோ அவர்களை அமர வைத்து இதை முதலில் அவரது தலையில் சிறிது தெளித்து பின்பு 2 தோல் பட்டைகளிலும் மேலிருந்து கீழாகத் தெளித்து, பின் நெஞ்சில் தெளித்து, பின் வயிற்றுப் பகுதியில் தெளித்து அப்டியே 2 கால் முட்டிகளில் இருந்து பாதம் வரை தெளித்து கொண்டே இறக்கி தரையில் விடவும்.

முடித்தவுடன் எதையும் தொடாமல் அவர்களை குளிக்க சொல்லவும். அந்த இடத்தை சிறிய துணியால் துடைத்து வீட்டிற்கு வெளியே போடவும். மாதத்திற்கு 3 முறை இந்த பரிகாரத்தை செய்து வர நிறைந்த வருமானத்திற்கு வழி வகுத்து கடன் தீர்க்க உதவும்.