வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

0
533
#image_title

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

பரிகாரம் 01:

தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும்.

கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும்.

அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்க தொடங்கும்.

பரிகாரம் 02:

பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, சஷ்டி ஏதாவது ஒரு நாளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். முதலில் சிறிது சதுர வடிவ மஞ்சள் துணியில் கொம்பு மஞ்சள் 3, ஏலக்காய் 9, ஒரு ரூபாய் நாணயம் 3வைத்து முடிச்சி போட்டு அரிசி வைத்து இருக்கும் பாத்திரத்தில் போடவும். இதை காலை 4.30 – 6.00 மணிக்குள் செய்யவும்.

அடுத்த மாதம் அதே நாளில் மாற்றி நாணயங்களை பூஜை சாமான் வாங்க உபயோகிக்கவும். ஏலக்காய், மஞ்சள் ஆகியவற்றை நாமே உபயோகித்து கொள்ளலாம்.

பரிகாரம் 03:

முதலில் ஒரு பச்சை நிறத் துணி எடுத்துக் கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி போட்டு பச்சை ரப்பர் பேண்ட் போட்டு சிறிது மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

இதை வெள்ளிக்கிழமை காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். 48 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போட்டுவிடவும். இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்க தொடங்கும்.

Previous articleபனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!
Next articleசைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!