ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

0
207

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவது. இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்று மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்து இருக்கின்றார். இதனையடுத்து இன்றைய போட்டியில் ஒலிம்பிக் ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் அரவிந்த் மூன்றாவது இடம் பிடித்த அரையிறுதிக்கு தேர்வு பெற்று இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் இஸ்ரேல் வீராங்கனை பொலிகார்போவாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

இவரும் இந்தியாவுக்கு எப்படியாவது பதக்கத்தை வென்று தருவார் என்ற அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!
Next articleஇன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!