தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்!

0
137
#image_title

தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் பாடகி சித்ரா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருதுகளும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல ஏராளமான மாநில விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இவர் பெற்றுள்ளார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற சித்ராவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் உள்ளது. அது வேறெதும் இல்லை. அவருடைய மகளின் இறப்பு தான்.

பிரபல பாடகி சித்ராவிற்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து நந்தனா என்ற மகள் பிறந்தாள். ஆனால், பிறந்த நந்தனா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டாள். இருந்தாலும், மகளை பாசத்தோடு, அன்போடு வளர்த்து வந்தார் சித்ரா. அவர் எந்த இடம் போனாலும் கூடவே தன் மகளை அழைத்துச் செல்வார்.

சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் நந்தனா சேர்ந்தாள். அவளுக்கு 8 வயதாகும் இருக்கும்போது, சித்ரா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக தன் மகளை துபாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கு தான் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்தது. நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த நந்தனா திடீரென குளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, தன் மகளை மடியில் போட்டு கதறி, துடிதுடித்து அழுதார். அவர் அழுததைப் பார்த்து அங்கிருந்த அனைவருமே கண்கலங்கி விட்டனர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத எனக்கு கடவுள் ஒரு வரத்தை கொடுத்து மீண்டும் அதை எடுத்துக் கொண்டாரே என்று தேம்பி, தேம்பி அழுதார்.

இதன் பின் நந்தனாவின் உடல் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சாலிகிராமத்தில் உள்ள சித்ரா வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, நந்தனா அடக்கம் செய்யப்பட்டாள்.

 

Previous articleஅடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!
Next articleஎதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!