பெண்களுக்கு இனி ‘புதிய ரேஷன் கார்டு’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

பெண்களுக்கு இனி ‘புதிய ரேஷன் கார்டு’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Vijay

கணவனால் கைவிடப்பட்ட அல்லது மறுவாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வலியுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று இல்லாத காரணத்தாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளது.

அத்தகைய பெண்களின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கணவனால் கைவிடப்பட்டு தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல், புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.