புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!
இந்திய ரிசர்வ் வங்கி 2016 ம் ஆண்டு முதலில் ரூ.2000 நோட்டுகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது. பின்பு இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இப்படி திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி மட்டும் ரூ 3.62 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் பயன்பாட்டில் இருந்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்புடைய ரூ 2.41 லட்சம் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது.
பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிகளில் செலுத்தப் பட்டதன் காரணமாகவும் மீதம் உள்ள 15 சதவீதம் வேறு நோட்டுகள் வாங்கப்பட்டதன் காரணமாகவும் பெறப்பட்டது.
இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதன் மூலம் நாட்டின் நிதி நிலைமையை மாற்றி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுவரை மட்டும் சுமார் 88 சதவீதம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை பெற்று விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.