என் உயிரே போனாலும் பரவாயில்லை! ஸ்டாலினை எகிறி அடித்த எடப்பாடியார்!

Photo of author

By CineDesk

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களையும், ஆட்சிக்கு வந்தால் செய்வதாக கூறியுள்ள வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் முதலமைச்சருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கடும் வெயில், கொரோனா தொற்று பரவல் என எதை பற்றியும் கவலையின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருநாளைக்கு 10 இடங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செம்ம எனர்ஜியாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், அவரால் சரியாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திமுக ஆட்சியை கைப்பற்ற விடக்கூடாது என்பதில் தீவிரமாக செயல்படும் முதல்வர், தன் நலனைக்கூட கருத்தில் கொள்ளாது சூறாவளி பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார்.

இன்று சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி தொண்டை எல்லாம் மங்கி போய்விட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. ஜெயலலிதா சொன்னது போல் அவருக்கு மறைவிற்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும். அதற்காக தொண்டை இல்லை, உயிரை கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என தொண்டர்களிடம் உருக்கமாக பேசினார். அப்போது அதிமுகவினரின் ஆராவாரம் விண்ணை பிளந்தது.

மக்களால் நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் என்னையே நினைத்துக் கொண்டு இருக்கிறார். தூங்கும் போது சரி, விழித்துக் கொண்டு இருக்கும் போதும் சரி என்னைப் பற்றியே தான் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டுமக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய இடம் சட்டமன்றம், அங்கேயே அராஜகத்தில் ஈடுபடுகிற கட்சி திமுக. தன்னுடைய ரவுடித்தனம், அராஜகத்தை காட்டியுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகாவிட்டால் ஸ்டாலின் என்ன நிலைக்கு செல்வார் என நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என வெளுத்து வாங்கினார்.