சிவகங்கையில் இரட்டை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், குடும்ப பிரச்சினைகள் மற்றும் தற்கொலை சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்த போது பணம் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் கொலையும் செய்து தப்பியுள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடுக்கூரணியில் ராணுவ வீரர் ஸ்டீபன் குடும்பம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இராணுவ வீரரின் தாய் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.