அந்த காலத்தில் ஒரு வசனத்தை பேச வேண்டும் என்றால், கையில் வசனங்கள் எழுதிய டயலாக் பேப்பர்களை தருவார்கள். அதை நடிகர்கள் மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பார்கள்.
ஆனால் காலம் போகப் போக ஒவ்வொரு இயக்குனர்களின் பானி வித்யாசமாக இருக்கும். அப்படித்தான் பாரதிராஜாவிற்கு பாக்கியராஜ் பரவாயில்லை என்று சிவாஜி நினைத்திருக்கிறார். அந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பாக்யராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பாக்கியராஜ் உடன் “தாவணி கனவுகள்” என்ற படத்தில் சிவாஜி அவர்கள் இணைந்து நடித்துள்ளார். அப்பொழுது படப்பிடிப்பின் பொழுது பாக்கியராஜ் துணை இயக்குனர்களிடம் , சிவாஜி டயலாக் பேப்பரை கேட்டுள்ளார்.
“இதோ எடுத்து வருகிறேன்”என்று சொல்லி அனைத்து துணை இயக்குனர்களும் தப்பி இருக்கின்றனர். சிவாஜி அவர்களும் டயலாக் பேப்பர் எப்பொழுது வரும் என்று யோசித்துக் கொண்டே இருக்க ஷாட் ரெடியாகிறது.
உடனே சிவாஜி பாக்கியராஜை அழைக்கிறார்.
“நானும் ஒவ்வொரு அசிஸ்டெண்டாக கேட்கிறேன்” எங்கே டயலாக் பேப்பர்? என்று, “ஒருத்தன் கூட பதில் சொல்லாமல் தப்பி ஓடி விட்டார்கள்” எங்கே டயலாக் பேப்பர்?”
உடனே பாக்யராஜ் ” இருந்தால் தானே கொடுக்கிறதுக்கு”” அது அப்படியே நான் சொல்ல சொல்ல நடிக்க வேண்டும்”” அது அப்படியே பழகி போய்விட்டது'” என்று சொல்லியிருக்கிறார்.
“அது எப்படி நீ சொல்ல சொல்ல நடிப்பதா “”மற்ற நடிகர்கள் எல்லாம் எப்படி நடிப்பார்கள்”?
அது ” அசிஸ்டென்ட்கள் ஒன்று மூன்று முறை அவர்களுக்கு என்ன டயலாக் என்பதை சொல்லிவிடுவார்கள்”.
இப்படியும் இயக்குனர்கள் இருக்கிறார்களா என்று சிவாஜி நினைத்துள்ளார்.
அதன் பிறகு பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை படம் எடுத்தார்கள்.
அப்பொழுது பாரதிராஜா அவர்கள் ” சன் செட் ஆகறது போய் நடந்து வாருங்கள்”” நடந்து மட்டும் வாருங்கள் போதும்” என்று சிவாஜியை சொல்லி இருக்கிறார்.
உடனே சிவாஜி “நான் சிவாஜி எதற்கு நடந்து வர வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
“சன் செட் ஆகப்போகிறது” நடந்து திரும்பிப் பாருங்கள் எட்டிப் பாருங்கள் போதும்” என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.
அதற்கு சிவாஜி அவர்கள் “அதற்கு உன்னுடைய சிஷ்யனே பரவாயில்லை”. “அவன் என்ன டயலாக் என்றாவது சொல்லுவான்”. இங்கு எந்த ஒரு டயலாக்கும் இல்லாமல் இப்படி நடந்து வர சொல்கிறார்களே என்று சொல்லி இருக்கிறார்.