மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

0
225
#image_title

மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என

நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி.

 

சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது.

 

 

அப்படிப்பட்டவர் மறுபிறவியில் நான் டி ஆர் ராஜகுமாரியின் சகோதரனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் என்பது ஒரு பத்திரிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

 

அப்படி மனித உணர்வுகளை வைத்து பாடல்கள் எழுதிய கண்ணதாசன், தான் அடுத்த ஜென்மத்தில் இந்த நடிகைக்கு சகோதரனாக பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தான். தஞ்சை மாவட்டத்தில் 1922-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 13 வயதில் 1935-ம் ஆண்டு, கார்வான் ஈ கயாத் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, 1939-ம் ஆண்டு வெளியான குமர குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள டி.ஆர்.ராஜகுமாரி கடைசியாக 1963-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் பெரிய இடத்து பெண் என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும் இந்த படத்தை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். 1948-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிந்த ஒரு நடிகையாக மாறிய டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகிய இருவருடனும் மிகுந்த நட்புடன் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடனும் நல்ல நட்புடன் T.R.ராஜகுமாரி இருந்த காரணமாகவே நட்பின் அடிப்படையிலேயே அவரது சகோதரர் டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய “கூண்டுக்கிளி” என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துக் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர்கள் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை!

author avatar
Kowsalya