சிவாஜி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதானாம்!

0
390
#image_title

அந்த காலத்தில் சிவாஜி குடும்ப படங்களையும், தேச பக்தி மிகுந்த தேசத்திற்காக போராடிய வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நடித்து அவர்களை நம் கண் முன்னே நிறுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

கட்டபொம்மனை பார்க்காத மக்கள் கட்டபொம்மனாக நடித்த சிவாஜியை பார்த்திருக்கிறோம். திருப்பூர் குமரன்,கப்பலோட்டிய தமிழன், அப்பர் என எத்தனையோ தேசபக்தி தேசத்திற்காக போராடிய தேசிய வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர் சிவாஜி.

 

அப்படி ஒரு பாத்திரத்தை தனக்குள் ஏற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு.

 

உடல்நிலை சரியில்லாத பொழுது கூட கட்டபொம்மன் படத்திற்காக வீர வசனத்தை பேசி ரத்த வாந்தி எடுத்தாராம் சிவாஜி. அந்த அளவுக்கு நடிப்பின் கிறுக்கன், நடிப்பின் அரக்கன், நடிப்பில் அசுரன் என எத்தனையோ பெயர்கள் அவருக்கு கொடுத்தாலும் மிகையாகாது.

 

ஒருமுறை ஒரு பேட்டியின் பொழுது, பத்திரிக்கையாளர் சிவாஜியிடம் நீங்கள் நடித்த கதாபாத்திரத்திலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு சிவாஜி” நான் நடித்து கதாபாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கப்பலோட்டிய தமிழன். வ உ சி பிள்ளையாக நடித்த அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என அவர் கூறியுள்ளார்.

 

இந்த படத்தைப் பார்த்துவிட்டு வ உ சி யின் மகன்,” என் தந்தையே என் கண்முன் நிறுத்தி விட்டீர்கள்” என்று ,சொன்ன பொழுது விருதை அளிப்பதை விட அந்த சொல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது என சிவாஜி கூறியிருக்கிறார்.

 

அதற்கு அடுத்ததாக சம்பூர்ண ராமாயணத்தில் நடித்த பரதனுடைய கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அதன் பின் அப்பர் மற்றும் பாசமலர் படத்தில் நடித்த அண்ணன் கதாபாத்திரம் அவருக்கு மிகவும்

பிடிக்குமாம்

 

Previous articleஇந்திய விமான நிலைய ஆணையத்தில் 119 காலிப்பணியிடங்கள்..! மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!
Next articleஎம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்