உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

0
115

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அந்த கட்சியைச் சார்ந்த பல முக்கிய மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். மேலும் கட்சியின் மேலிடத்தில் தான் இப்படி என்றால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கவுன்சிலர்கள் வரையில் அடித்தட்டு பதவியில் இருக்கும் திமுகவினர் கூட இது போன்ற சில ரொம்ப ரொம்ப தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவை அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவை அனைத்திற்கும் மேலாக கடந்த சட்டசபை தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று திமுக வெற்றி பெற்றுவிட்டது அந்த கட்சி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற முடிவு வெளியான உடனேயே திமுகவைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற விரும்பத் தகாத செயல்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்.

அப்போது சென்னையில் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மீது திமுகவைச் சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தி இருந்தார்கள்.

இந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அந்த இடத்திற்கு தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களை அனுப்பி சேதமான பொருட்களை சரி செய்து அந்த அம்மா உணவகம் மீண்டும் இயங்கும் அம்மா உணவகத்திற்கு எந்த விதமான ஆபத்தும் வராது என்று உறுதி அளிக்க வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிலையில் இன்று திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்டு வருவதால் திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமைக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.