இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

0
261

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இதுவரை 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த ஐந்து திரைப்படங்களில் டாக்டர் படமும் ஒன்று என கூறப்படுகிறது.

Previous articleசட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!
Next articleஇளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here