தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!!

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளரும் நடிகரும் ஆவார். இவரின் மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். மெரினா திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படமாகும். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி சில வருடங்களிலேயே தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட முன்னணி நடிகராக விளங்கினார்.

பின்பு இவரின் அதீத வளர்ச்சியால் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவர் பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவர் டாக்டர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

 

இந்தநிலையில் அண்மையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் 18 வருடங்களுக்கு பிறகு இன்று என் அப்பா என் விரலை பிடித்திருக்கிறார் என் மகனாக. என தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இன்று தனது மகனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் அவரது மகனுக்கு குகன் என்ற பெயர் வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தெரிவித்தார். சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவு செய்ததாவது எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும், ஆசையோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டி இருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Leave a Comment