அதற்கு சிவகார்த்திகேயன் அடிமை அதுதான் அவருடைய வீக்னஸ்! நடிகை பிரியங்கா மோகன் பேட்டி!!
நடிகை பிரியங்கா மோகன் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் வீக்னெஸ் இது தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார்.
கன்னட மொழியில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் 2019ம் ஆண்டு நடிகர் நானி நடித்த நானிஸ் கேங்குலீடர் என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஸ்ரீகரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2021ல் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக உள்ளார்.
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார். அதன் பின்னர் இரண்டாவது முறையாக டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து நடித்தார்.
தற்பொழுது நடிகை பிரியங்கா மோகன் நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் வீக்னஸ் குறித்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் “நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் வீக்னெஸ் என்ன என்பது பற்றி எனக்கு தெரியும். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். இனிப்பு சுவைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடிமையாகி விட்டார்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எப்பொழுதும் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இனிப்பு சாப்பிடுவது மட்டுமில்லாமல் எங்களுக்கும் கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்துவார். இனிப்புகள் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் வீக்னஸ்” என்று கூறியுள்ளார்.