இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

Photo of author

By Vinoth

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

Vinoth

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

இயக்குனர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

நாளை ரிலீஸ் ஆகவுள்ள பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படம் தொடங்கி சில மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இப்படி வேகமாக படப்பிடிப்பை நடத்திவரும் இயக்குனரை இன்னும் வேகமாக ஷுட் செய்து தன் காட்சிகளை முடிக்குமாறு சிவகார்த்திகேயன் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். அதற்குக் காரணம் அடுத்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கதானாம்.

 மேலும் படப்பிடிப்பில் இயக்குனர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் தனக்கு ஏற்றவாறு திரைக்கதையில் மாற்றங்களை சொல்வதால்தானாம். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மடோன் அஸ்வின் தனது முதல் படமான மண்டேலா படத்துக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.