குருதி ஆட்டம் இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்!

0
86

குருதி ஆட்டம் இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் 8 தோட்டாக்கள் என்ற வெற்றிப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம் 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. மதுரை பின்னணியில் ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகியிருக்கும் படமாக குருதி ஆட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சி தற்போது திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர், பின்னர் இயக்குனர் ஸ்ரீகணேஷ் மற்றும் தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை பாராட்டியுள்ளார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. திரையுலகில் இருந்து வரும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.