டாக்டர் & டான் படங்களின் வெற்றியால் எகிறும் மார்க்கெட்… பிரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் இத்தனைக் கோடியா?

0
241

டாக்டர் & டான் படங்களின் வெற்றியால் எகிறும் மார்க்கெட்… பிரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் இத்தனைக் கோடியா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது.

இதற்கிடையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் இப்போது அவரிடம் இருந்து சென்னை உள்ளிட்ட சில ஏரியாக்களின் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் மட்டுமே இத்தகைய சாதனைகளை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் ரிலீஸ்வாதால் படத்துக்கு கூடுதல் வியாபாரம் நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Previous articleஅதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!
Next articleஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!