பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

0
253

பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஆந்திராவை சேர்ந்தவர். அவர் இயக்கிய ஜதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து அவருக்கு இந்த பட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “ இந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய மொழியான தெலுங்கில் சிந்திக்கக் கூடியவர். அதை நாம் தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்றவாறு மாற்றவேண்டும். அதனால் பட உருவாக்கம் சவாலானதாக இருந்தது. தீபாவளிக்கு அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்கும் குடும்ப பொழுதுபோக்கு படமாக பிரின்ஸ் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Previous articleஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Next articleநெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here