பிரின்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் மறுபடியும் ஷுட்டிங்… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

பிரின்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் மறுபடியும் ஷுட்டிங்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.

இந்த படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்த படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்துக்குப் பிறகு சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்‌ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.