வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா?

0
79

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா?

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்க உள்ளது.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும், இரண்டு ஆக்‌ஷன் காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடந்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஷூட்டிங்குக்கு வம்சி எடுத்துக் கொண்டுள்ளாராம். இதனால் கூடுதலாக விஜய்யிடம் 40 நாட்கள் கால்ஷீட் கேட்டு வாங்கி ஷூட்டிங் நடத்தியுள்ளார்களாம். இதனால் விஜய் வம்சி மீது கொஞ்சம் அதிருப்தியாக உள்ளார்களாம். இதனால் விஜய் லோகேஷ் படம் தொடங்குவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

வாரிசு திரைப்படத்தை முடித்துவிடு ஒரு குறுகிய பிரேக் எடுத்துக் கொண்டு விஜய் உடனடியாக லோகேஷ் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.