கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

Photo of author

By Parthipan K

சிவகாசி அருகே வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து சிறிய காடுகளையும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த கண்மாய்கள் தூர்வாரி பராமரித்து வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அந்த கிராமத்தில் உள்ள இயற்கையை மிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதில் முதல் கட்டமாக 60 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருந்த கண்மாய்களை தூர்வாரும் பணியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியுள்ளனர்.மேலும் அவர்கள் காடுகளை உருவாக்கும் முயற்சியில் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், வீதிகள்தோறும் மரங்கள் வளர்ப்பது, நீர்நிலைகளை பராமரிப்பதும், கண்மாய்களை தூர்வாருவதும், மண்ணரிப்பு சம்பந்தமான அனைத்து வகையான மரங்களையும் கரையில் நடுவது, மற்றும் முறைப்படி பராமரிப்பது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதாக கிராம சுற்றுச்சூழல் அமைப்பின் உறுப்பினரான ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குழுவில் 120 உறுப்பினர்கள் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், சுழற்சி முறையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை கால பணியாற்றுவார்கள் என்று கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்றால் மரக்கன்று நடுதல் மட்டும் தான் அவர்களது பணியாகும் என்றும் , இதுவரை சுமார் 70 மரக்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிப்பது வருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் விஸ்வநத்தம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நம்மாழ்வார் குழு ஒன்றை அமைத்து , அங்கு 130 மரக்கன்றுகள் வளர்த்து பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

சுமார் 60 ஆண்டுகள் பராமரிக்கப்படாமல் இருந்த விஸ்வநத்தம் கண்மாய் ஏரியில், சுமார்40 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் கருவேல மரங்களை அகற்றி நீர் சேமித்து வைக்க தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைப்பின் உறுப்பினரான ரமேஷ் தெரிவித்துள்ளார்.