மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

0
82

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரூர் அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வேளாங்கண்ணி (36) என்பவருக்கு 2 மகன்களும், ஒரு மகளுடன் வசித்து வந்தார் .இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அந்த பெண் வந்து, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்தப் பெண் விசாரித்த பொழுது , அரூர் அண்ணாநகரில் ,என் தந்தைக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை அவரது 5 மகன்களும் எடுத்துக் கொண்டதாகவும், அதே பகுதியில் வசித்து வரும் என் அண்ணனின் மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த அரூர் காவல்துறையிடம் புகாரளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி ,தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் வேளாங்கண்ணியிடம் இடையூறு செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

author avatar
Parthipan K