ரீமாசெனுக்கு போட்டியாக சிவாங்கியின் ‘வசீகரா’ ரீமேக்!

Photo of author

By Rupa

ரீமாசெனுக்கு போட்டியாக சிவாங்கியின் வசீகரா ரீமெக்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் சேர்ந்து நடத்தும் நகைச்சவை அனைத்தும் வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.இது முதல் சீசனிலேயே அதிக அளவிற்கு விஜய் டிவிக்கு டி.ஆர்.பி கொடுத்தது.அதில் சிறிதளவு மாற்றம் கூட இல்லாமல் இந்த சீசனும் டிஆர்பி ஏறியுள்ளது.

இந்த சீசனின் ஹை-லெட் ஆக சிவாங்கி மற்றும் அஷ்வினின் பேரை வைத்து அதிக அளவு மீம் கிரியேட்டர்கள் சம்பாதித்தனர்.அதுமட்டுமின்றி அவர்களின் ஜோடிக்கென்றே அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.அதன்பின் சிவாங்கி மற்றும் புகழ் அண்ணன் தங்கை பாசத்தை பார்த்த அனைவருக்கும் நமக்கும் இவர் போல அண்ணன் வேண்டும்மென்று நினைக்க வைக்கும் அளவிற்கு அண்ணன் தங்கை உறவின் மூலம் பிரபலமடைந்து விட்டனர்.

https://www.instagram.com/p/CNAIBIvlE2L/?utm_source=ig_web_copy_link

தற்போது சிவாங்கி தனது இன்ஸ்டா வில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் வசீகரா பாட்டிற்கு நடனம் ஆடி போஸ்ட் போட்டுள்ளார்.இதை பார்ப்பவர்கள் அனைவரும் ரீமசெனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது என்று பேசி வருகின்றனர்.அதுமட்டுமின்றி இப்பதிவு அஸ்வினுக்காக கூட இருக்கலாம் எனவும் பேசி வருகின்றனர்.