சிவப்பு ரோஜாக்கள்2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
187

தமிழ்சினிமாவில் 80’ல்  பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று சிவப்பு ரோஜாக்கள். இந்தப்படத்தில் கமலஹாசனின் அட்டகாச நடிப்பினால் அவர் பெரிதும் பிரபலமானார்.

இந்த படத்தை இயக்கிய முன்னணி இயக்குனரான பாரதிராஜா முந்தைய படங்களை விட வித்தியாசமாகவே இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

படமானது திரையரங்கில்175 தாண்டியும் ஓடி  பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அதற்கான தகவல்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது. இது  குறித்து இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தற்பொழுது சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான எண்ணம் எதுவும் இல்லை என்றும், அப்படி எடுக்க விரிந்தால் கண்டிப்பாக நானும் எனது தந்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்றும், அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,ரசிகர்களின் அக்கறைக்கு மிகுந்த நன்றி” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

Previous articleதினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!
Next articleசென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here