தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

0
211

தினம் ஒரு திருக்குறள்

குறள் சொல்லும் நீதி

குறள் :667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து”

குறள் விளக்கம்:

உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும்.

தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது.

கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் நீர் குடிப்பதற்கு பயன்படாது. ஆனால் கடலுக்கு அருகில் ஒரு சின்ன குழியில் தேங்கி இருக்கும் தண்ணீர் பருகுவதற்கு நன்றாக இருக்கும்.

உருவத்தில் சிறியதாக இருந்தாலும் முள்ளம்பன்றி தன் முட்களை வைத்துக் கொண்டு மிகப் பெரிய யானை, புலி, சிங்கம் ஆகிய விலங்குகளை விரட்டும்.

அவ்வளவு ஏன் மாவீரன் நெப்போலியன் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் அவரது புகழை உலகம் இன்றும் பறைசாற்றி வருகிறது.

இதுபோல் எண்ணற்ற உவமைகளை கூறிக்கொண்டே போகலாம்.

ஒருவர் உருவ அளவில் பெரியதாக இருந்தாலும் மனத்தால் சிறியவர். ஒருவர் உருவ அளவில் சிறியவராக இருந்தாலும் மனத்தால் பெரியவர். உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது. அவர்கள் செய்யும் காரியம்தான் அவர்களை எடை போடும்.

எனவே தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக எடை போட கூடாது என திருவள்ளுவர் கூறுகிறார்.

author avatar
Kowsalya