Breaking News, News, State

திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Photo of author

By Gayathri

திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Gayathri

Button

2024 ஆம் ஆண்டுக்கான “திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள் பின்வருமாறு:

1. காலை உணவு திட்டம்
2. இல்லம் தேடி கல்வி திட்டம்
3. எண்ணும், எழுத்தும் திட்டம்
4. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம்
5. வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம்
6. மாற்றுத்திறனாளி மாணவர் மீது அதிக கவனம் செலுத்தும் திட்டம்” ஆகியவை.

இந்த திறன்மிக்க திட்டங்களால் தமிழ்நாட்டில், “நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர்ந்து உள்ளது” எனப் பெருமிதம் கொள்கிறது. ‘2019 ஆம் ஆண்டு கணக்கின்படி, நூறில் 99 பேர் உயர்நிலைக் கல்வி பயின்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டு கணக்கின்படி 100 பேரும் உயர்கல்வி பயில்கின்றனர். அதாவது படிப்பை இடையில் விடுவோர் தமிழ்நாட்டில் கிடையாது.

மேலும் உயர்நிலை படிப்பை முடித்த மாணவர்களின் சதவீதமானது, 2019 ல் 81.3% லிருந்து 2024 இல் 89.2% ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளின் சதவிதமானது 89.4%-லிருந்து 95.6 சதவீதமாக வெற்றி கண்டுள்ளது”. ‘2024 ஆம் ஆண்டு கணக்கின்படி, பீகார், அரியானா, ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பள்ளி படிப்பை விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ வருத்தத்துக்குரியது.

தமிழக அரசின் இந்த ஆறு திட்டங்களால் தான் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு கூறுகிறது’ என பெருமிதம் கொள்கிறது தமிழக அரசு.

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் திடீர் ED ரெய்டு.. இதிலிருந்து வெளிவர என்ன பிளான்!! ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!!

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!