சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Parthipan K

Updated on:

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்ரிட்டம்மிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சேலம் ஐயா திருமாளிகை பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் அந்த நபர் இன்ஜினியரிங் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் சவுந்தர்ராஜன் (21) என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் சௌந்தர்ராஜன் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதேபோல் சேலம் நெத்திமேடு ,மணியனூர் பகுதியில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் கஞ்சா விற்ற பிச்சா கார்த்தி என்ற கார்த்திக் (24). மணியானூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற லட்சுமணன் (38). ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.