ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
அண்மையில் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கி பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.மேலும் போலி கணக்குகள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.
அந்த உத்தரவில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நடைமுறைகள்,அரசின் இயக்கம் போன்றவற்றை குறித்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்கள் பரப்பி வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.அதனை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையின் மூலமாக யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சேனல்கள் மொத்தம் சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவை வெளியிட்ட வீடியோக்களை 51 கோடிக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்ததும் தெரியவந்தது.இந்நிலையில் அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களை பரப்பி இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.