5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

0
300
#image_title

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் “ஸ்பைடர்”. இப்படத்தில் வில்லனாக எஸ்.கே.சூர்யா அவர்கள் நடித்திருந்தார். இப்படத்தில் எஸ்.கே. சூர்யா அவர்களின் கதாபாத்திரமும் தனித்துவமான நடிப்பும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இரண்டாவதாக அதே 2017 ஆம் ஆண்டில் வெளியான மெர்சல் திரைப்படம். இயக்குனர் அட்லி அவர்களின் இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள்தான். தனது மிரட்டலான நடிப்பில் இந்த படத்தில் இருப்பார்.

மூன்றாவதாக 2021 ஆம் ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம். நடிகர் சிம்பு அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது மாநாடு. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் தனுஷ்கோடி என்னும் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு தான் எஸ்.கே.சூர்யா அவர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அடுத்ததாக டான் திரைப்படம் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவான டான் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார். இந்த படத்திலும் நடிப்பில் அவர் மிரட்டி இருப்பார்.

ஐந்தாவது படமாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “மார்க் ஆண்டனி” படம் தான். மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் தனித்துவமான நடிப்பிற்காக படத்தின் வசூல் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. எஸ்.கே. சூர்யா அவர்களின் மிரட்டலான நடிப்பால் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Previous articleஇந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!
Next articleபிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!