திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் தோல் சாயக்கழிவு நீர் பாலாற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக கலெக்டர் இடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லாததால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனை பற்றி மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாலாற்றில் நுரை பொங்கும் பகுதிகளை ஆய்வு செய்ய வாணியம்பாடி அடுத்த மாறாபட்டுக்கு வந்தனர். மேலும் அவர்களை சிறைப்பிடித்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அடுத்ததாக அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்.
மேலும் தொழில்சாலை கழிவுகளை கலப்பது யார் என தெரிந்தும் அதிகாரிகள் கண்துடைப்புக்காக ஆய்வு செய்வதாக குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் பேச்சு நடத்தினர். பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.