இறந்த தாயை விட தூக்கமே முக்கியம்!! உண்மையை உடைத்த நடிகை!!

Photo of author

By Gayathri

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதேனும் பிரச்சனை அல்லது மகிழ்ச்சியான தருணம் என்றால் பொதுவாகவே அந்நாளில் இரவில் தூக்கம் என்பது பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படி இருக்க பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய தாய் இறந்த பொழுது கூட தனக்கு தூக்கமே முக்கியம் எனக் கூறி தூங்க சென்றதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சினிமா துறையில் பிறருடைய சாயலை காட்டாமல் தனக்கென ஒரு தனி சாயலை உருவாக்கிக் கொண்ட தைரியமான நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை லட்சுமி அவர்கள். நடிப்பு ராட்சசி என்ற புனைப்பெயர் கொண்ட லட்சுமி அவர்கள் பல திரைப்படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை திறமைமிக்க நடித்துக் கொடுத்தவர்.

இப்படிப்பட்ட நடிகை லட்சுமி அவர்கள் யாருக்காகவும் எதற்காகவும் தன்னுடைய தூக்கத்தை தொலைக்க மாட்டேன் என பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். அதாவது தன்னுடைய சொந்தமோ அல்லது நெருங்கிய நண்பர்களோ என யாராக இருந்தாலும் தன்னுடைய தூக்கத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் அது இறப்பாக அது இறப்பாக இருந்தாலும் சரி அல்லது அவர்களுக்கு ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் சரி இரவு 10 மணி முதல் 10.30 மணிக்குள் நான் உறங்கி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உதாரணமாக அவர் சுட்டிக்காட்டி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவரது தாயார் இறந்த வீட்டில் கூட இரவு தூங்க வேண்டும் என்பதற்காக தன் தாயாரின் காதில், “என்னை பற்றி உங்களுக்கு தெரியும். என்னால் தூங்காமல் இருக்க முடியாது. இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு பிறகு வந்து உங்களை காண்கிறேன்” எனக் கூறிவிட்டு உறங்க சென்றதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இறந்த வீட்டில் தூங்கக் கூடாது என அவர்களது சகோதரிகள் கூறியதற்கு உங்களுக்கு உங்களது பெரியம்மா முக்கியம் என்றால் நீங்கள் தூங்காமல் இருங்கள் எனக்கு என் தூக்கமே பெரிதென்று கூறி சென்றதாகவும் அவரே தெரிவித்திருக்கிறார்.