இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க!
பொதுவாகவே பெரியவர்கள் நாம் எந்த பக்கம் படுத்து உறங்க வேண்டும் என கூறுவார்கள். கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் தான் உறங்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரை செய்வது உண்மை. ஏன் இடது பக்கம் தூங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலர் நேராக நிமிர்ந்தும், ஒரு சிலர் கம்மிருந்தும் உறங்குவார்கள். இவ்வாறு நாம் உறங்குவது நம் உடலுக்கு தீமையை தரக் கூடும். நாம் நேராக படித்து உறங்கும் பொழுது குறட்டை ஏற்படும் அதற்கு காரணம் நம்முடைய நாக்கு,வாய், தாடை அனைத்தும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் சமநிலையாக இருக்கும் அதனால் குறட்டை பிரச்சனை ஏற்படுகின்றது.
இதுவே நாம் இடது பக்கம் படுத்து தூங்கும் பொழுது குறட்டை விடுவதில் இருந்து தடுக்கலாம். இடது பக்கம் படுத்து தூங்கும் பொழுது நெஞ்சு எரிச்சல், மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி உடலுக்கு சீராக ரத்த ஓட்டம் செல்லும்.கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் தூங்குவது நல்லது என பலரும் கூறுவார்கள். அதற்கு காரணம் நெஞ்செரிச்சல் பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
நம் உடலில் கல்லீரலிலும், சிறுநீரகத்திலும் தான் அதிகப்படியான கழிவுகள் தேங்கும். இடது பக்கம் படுத்து உறங்கும் பொழுது கழிவுகள் சுலபமாக உடலில் இருந்து வெளியேறுகிறது. இடது பக்கம் நாம் படுத்து உறங்கும் பொழுது குடல் சரிசமமாக இருந்து சீராக செரிமானமாக உதவுகின்றது.