உடல் ஒல்லி ஆனால் வயிறு குண்டு? டோன்ட் ஃபீல்.. காலையில் இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்!!

Photo of author

By Divya

உடல் ஒல்லி ஆனால் வயிறு குண்டு? டோன்ட் ஃபீல்.. காலையில் இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்!!

உங்களில் சிலர் ஒல்லியான தோற்றம் கொண்டிருந்தாலும் வயிற்றுப் பகுதி மட்டும் சற்று பெரியதாக இருக்கும்.இதனால் மேனி அழகு குறைந்து விடும்.வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு தேங்குவதால் தான் அவை சற்று பெருத்து காணப்படுகிறது.

இதை குறைக்க உடற்பயிற்சிகள் மேற்கொள்ள நினைப்பவர்கள் 2 நாட்களுக்கு மேல் அதை செய்ய மாட்டார்கள்.சிலர் டயட் இருப்பார்கள்.டயட்டை முறையாக பாலோ செய்தால் மட்டுமே உடல் பிட்டாக இருக்கும்.ஒரு மாதம் டயட் பாலோ செய்து உடல் எடை குறைந்து விட்டது என்று டயட்டை நிறுத்தினால் உடல் எடை வேகமாக கூடிவிடும்.

எனவே கஷ்டப்பட்டு உடற் பயிற்சி செய்வது,டயட் இருப்பது போன்றவற்றை விடுத்து ஆரோக்கிய பானங்கள் குடித்து வந்தாலே வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைந்து விடும்.

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுக் கொழுப்பு கரையும்.

ஒரு கிளாஸ் சூடான நீரில் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.

ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடந்த கொழுப்புகள் கரைந்து விடும்.

தினமும் ஒரு கப் புதினா தேநீர் குடித்து வந்தால் வயிற்றுக் கொழுப்பு சில தினங்களில் கரைந்து விடும்.