நீங்கள் எது சாப்பிட்டாலும் செரிக்க லேட்டாகுதா? இந்த டீ ஒருமுறை குடியுங்கள்! ஆயுசுக்கும் செரிமான பிரச்சனை ஏற்படாது!!
அரபு நாட்டவர்கள் விரும்பி அருந்தும் சுலைமானி தேநீர் உடலுக்கு புத்துணர்வு தரக் கூடியது.நீங்கள் அதிகமாக உணவருந்தி விட்டீர்கள் என்றால் உடனே இந்த சுலைமானி தேநீர் செய்து குடியுங்கள்.சாப்பிட்ட உணவு சில நிமிடங்களில் செரித்து விடும்.அது மட்டுமின்றி ஜீரணசக்தி மேம்படும்.
மழை மற்றும் குளிர்காலங்களில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள சுலைமானி தேநீர் செய்து அருந்தலாம்.அரபு நாட்டு மக்கள் மட்டுமல்ல நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த சுலைமானி தேநீர் பேமஸான ஒன்றாக உள்ளது.வீட்டு விசேஷங்களில் உணவு அருந்திய பின்னர் இந்த தேநீரை தான் விருந்தினர்களுக்கு வழங்குவார்களாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய் – இரண்டு
2)பட்டை – ஒரு துண்டு
3)கிராம்பு – இரண்டு
4)புதினா இலை – இரண்டு
5)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
6)தேயிலை தூள் – 1/2 தேக்கரண்டி
7)தேன் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
8)இஞ்சி – ஒரு பின்ச்
செய்முறை:-
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு இரண்டு ஏலக்காய்,ஒரு துண்டு பட்டை மற்றும்,இரண்டு கிராம்பை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு பின்ச் அளவு இஞ்சியை அதில் சேர்க்கவும்.பின்னர் தங்களிடம் உள்ள தேயிலை தூள் அரை தேக்கரண்டி அளவு சேர்த்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.அதன் பின்னர் இரண்டு புதினா இலைகளை அதில் சேர்த்து கலந்து விடவும்.தொடர்ந்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடிக்கவும்.இந்த மூலிகை டீ செரிமான பிரச்சனைக்கு நொடியில் தீர்வு தருகிறது.