தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் சிறுதானியப் பால்!! ஒன் வீக் குடிங்க போதும்!!

Photo of author

By Divya

பிறந்த குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க வேண்டும்.தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு உணவு என்பதால் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில தாய்மார்களுக்கு குறைவாகவே தாய்ப்பால் சுரக்கிறது.இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது.எனவே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறுதானியங்களில் கம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.கம்புவை அரைத்து பால் எடுத்து அருந்தலாம்.

கம்புவில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,புரதம்,நல்ல கொழுப்பு போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

1)கம்பு – அரை கப்
2)பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு கம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு கம்பை இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்யவும்.கற்கள் தூசிகள் இருந்தால் நீக்கிவிட வேண்டும்.

இந்த கம்பை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கம்பு பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.கம்பு பாலில் இனிப்பு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.குழந்தை பெற்ற தாய்மார்கள் கம்பு பாலை பருகி வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

கம்பு,முந்திரி,ஏலக்காய் போன்ற பொருட்களை இடித்து சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

அதேபோல் கம்புவை ஊறவைத்து இடித்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் உரிய பலன் கிடைக்கும்.கம்பு உட்கொள்வதால் மலச்சிக்கல்,சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாகும்.