தைராய்டு பிரச்சனைக்கு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0
384
Thyroid Symptoms in Tamil
#image_title

Thyroid Symptoms in Tamil: பெரும்பாலான பெண்கள் தற்போது பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது தைராய்டு. இந்த தைராய்டு பிரச்சனை இந்தியாவில் நான்கு கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தைராய்டு பிரச்சனை அதிக அளவில் பெண்களை தான் வருகிறது.

ஆண்களுக்கு குறிப்பிட்ட சிலருக்கு இந்த பிரச்சனைகள் வரலாம். ஆனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதுவும் கர்ப்ப காலத்தில் இந்த இந்த பிரச்சனையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நாம் இந்த பதிவில் தைராய்டு என்றால் என்ன அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

தைராய்டு

தைராய்டு மனிதர்களின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் மூலம் ஹார்மோன்கள் சுரக்கிறது. இந்த சுரப்பின் மூலம் சுரக்கும் ஹார்மோன் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக செயல்பட அவசியமாகிறது. இந்த ஹார்மோன் சுரப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதுதான் தைராய்டு பிரச்சனையாக உருவாகிறது.

தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் டி3 மற்றும் டி4 என அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் முக்கியமான ஹார்மோன் ஆகும்.

இந்த தைராய்டு பிரச்சனை இரு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் ஒன்று ஹைப்போ-தைராய்டிசம் மற்றொன்று ஹைப்பர் தைராய்டிசம்.

தைராய்டு சுரப்பினால் ஹார்மோன்கள் சரியாக உற்பத்தியாக செய்ய முடியாமல் போனால் அதற்கு ஹைப்போ-தைராய்டிசம் என்றும் அதிக அளவில் உற்பத்தி செய்தால் ஹைப்பர் தைராய்டிசம் எனவும் கூறப்படுகிறது.

தைராய்டுக்கான அறிகுறிகள்

தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் முகம், கழுத்து வீக்கமாக காணப்படும். மேலும் இவர்களின் கழுத்துப் பகுதி முகத்தை விட சற்று வீக்கமாக காணப்படலாம்.

மேலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும். முடி அதிக அளவில் உதிரும். பசி இல்லாமல் போவது அதிகமாக தூக்கம் வருவது, எப்பொழுதும் சோர்வாக உணர்வது போன்ற அறிகுறிகள் அறிகுறிகள் ஆகும். இவை அனைத்தும் ஹைப்போ-தைராய்டிசம் ஆகும்.

மேலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்படுவது, இதய துடிப்பில் மாற்றம் ஏற்படுவது, உடல் பருமன் குறைவது போன்றவைஹைப்பர் தைராய்டிசம் அறிகுறி ஆகும்.

முக்கியமாக கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை.

கடைபிடிக்கும் வழிமுறைகள்

தைராய்டு பிரச்சனையை கண்டறிந்த உடன் மருத்துவர் அணுகி அவர்கள் பரிசோதித்த பின்பு தைராய்டுக்கான மாத்திரைகளை கொடுப்பார்கள். அதனை தினந்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு சிலர் அந்த மாத்திரைகளை தினந்தோறும் எடுத்து வருவார்கள் மற்றவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருவது என்பது தவறு. ஏனெனில் மூன்று மாதங்கள் வரை மாத்திரங்களை சாப்பிட்ட பிறகு TSH பரிசோதிக்க வேண்டும். TSH என்பது தைரோட்ரோபின் அல்லது தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன் ஆகும். இதனை பரிசோதித்த பின்பு மருத்துவர் மாத்திரைகளை பரிந்துரைத்தால் தினமும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம்.

அதன் பிறகு நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலமும் தைராய்டு வராமலும் தைராய்டு பிரச்சனையில் உள்ள வீரியத்தை குறைக்க முடியும்.

 

சின்ன வெங்காயம்

தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள். உணவில் புளிப்பு, உப்பு, எண்ணெய் பொறித்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிராய்லர் சிக்கன் சாப்பிடக் கூடாது.

முக்கியமாக சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் சின்ன வெங்காயம் சாறு எடுத்து காலை குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க: மன நிம்மதி வேண்டுமா? “மயில் கொண்டை பூ பார்த்தால் விட்டுவிடாதீர்கள்” மருத்துவ குணம் கொண்ட மரம்..!!

Previous articleஉங்கள் பூஜை அறையில் மறந்தும் இந்த படங்களை வைத்து விடாதீர்கள்!! மக்களே எச்சரிக்கை!!
Next articleவெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.. மக்களே உஷார்!!