உங்கள் பூஜை அறையில் மறந்தும் இந்த படங்களை வைத்து விடாதீர்கள்!! மக்களே எச்சரிக்கை!!

0
379
Photographs of gods that should not be worshiped in the pooja room
#image_title

நாம் அனைவரது வீடுகளிலும் முக்கிய இடமாக பார்க்கப்படுவது பூஜை அறை தான். கடவுளை வழிபடுவதற்காக வீடுகளில் உள்ள இடம் தான் பூஜை அறை. அனைத்து நேரங்களிலும் கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபாடு செய்ய முடியாது என்பதற்காக தான் அனைத்து வீடுகளிலும் பூஜை அறையில் பல கடவுள்களின்களின் படங்களை வைத்து வழிபாடு செய்வர். இவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்யும் போது நாம் அனைத்து கடவுள்களின் படங்களையும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. எனவே நாம் இப்பதிவில் எந்ததெந்த கடவுள்களின் படங்களை பூஜை அறையில் வைக்ககூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

  • சனீஷ்வர பகவானின் புகைப்படங்களை நாம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய கூடாது. ஏனெனில் அவர் நாம் செய்யும் தீய செயல்களுக்கான தண்டனையை தருபவர், எனவே அவரது புகைப்படங்களை நாம் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது.
  • நவகிரகங்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது.
  • நடராஜரின் உருவப்படத்தை நாம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய கூடாது.
  • அதேபோல கோபமாகவும், உக்கிரமாகவும் இருக்கும் கடவுள்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது. எடுத்துக்காட்டாக காளி மற்றும் கால பைரவர் போன்ற கடவுள்களின் படங்களை பூஜை செய்யும் அறையில் வைக்கக்கூடாது.
  • நாக உருவம் கொண்ட கடவுள்கள் மற்றும் முனிவர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது.
  • அதேபோல இறந்த நம் முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது. மேலும் நம் வீட்டின் பூஜை அறை கிழக்கு நோக்கி அமைந்ததாக இருக்க வேண்டும்.

நம் பூஜை அறையில் எந்தெந்த கடவுகளின் படங்களை வைத்து வழிபடக்கூடாது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.