தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

Photo of author

By Vinoth

தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது, இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று பெரிய சிக்ஸர்களை அடித்து 61 ரன்கள் எடுத்து ஒரு சாதனையைப் படைத்தார்.

இந்த போட்டியில் அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 24 பந்துகளில் அரைசதம் அடித்து அவரே இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இப்போது அதை அவர் மீண்டும் முறியடித்துள்ளார்.

பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் டி 20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.