உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனை தொடர்ந்து ஒரு மாதத்தில் 8 முறை ஒரே பாம்பு கடித்து உள்ளது. இந்த வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் சிறுவன் தப்பித்து உயிர் பிழைத்துள்ளான்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி மாவட்டத்தில் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெயர் யாஷ்ராஜ் மிஷ்ரா. இவனது வயது 17. சிறுவனை பாம்பு பலமுறை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். கடந்த வாரம்கூட பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது குறித்த சிறுவனின் தந்தை சந்திரமௌலி மிஷ்ராவிடம் கேட்டபொழுது
” எனது மகன் தொடர்ந்து மூன்று முறை ஒரே பாம்பால் கடிபட்டதை அடுத்து பக்கத்து ஊரான பஹதுர்புர் என்ற கிராமத்தில் எனது உறவினரிடம் எனது மகனை கொண்டு போய் விட்டு விட்டேன்.
ஆனால் அங்கு போய் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே அதே பாம்பை மறுபடியும் பார்த்ததாக எனது மகன் கூறினான்.
அதிர்ந்து போன நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் அடுத்த நாளே அந்தப் பாம்பு அவனை கடித்து விட்டது. உடனே எனது உறவினர்கள் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சென்று எனது மகனை அனுமதித்தனர்.
இதுகுறித்து அவர்கள் உறவினர்கள் கூறுகையில் சிறுவனை பாம்பு கடித்த உடனே மருத்துவமனைக்குச் சென்று அனுமதிப்போம். மேலும் பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வழிமுறைகளையும் பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.
ஆனால் ஏன் எனது மகனை இந்த பாம்பு துரத்தி துரத்தி கடிக்கிறது என்ற காரணம் மட்டும் எங்களுக்கு தெரியவில்லை.பாம்பு கடிக்காமல் இருக்க பல பூஜைகளையும் செய்தோம் பாம்பாட்டி கொண்டுவந்து பாம்பு பிடிக்க செலவு செய்தோம். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை.
எனது மகனுக்கு எப்பொழுதும் பாம்பு நம்மை கடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறான்.இந்த பாம்பால் அவனுக்கு மன வேதனை ஏற்பட்டுள்ளது என்று சிறுவனின் தந்தை சந்திரமவுலி கூறினார்.
அதிர்ச்சியூட்டும் இந்த மாதிரியான சம்பவம் நாம் திரைப்படத்தில்தான் கண்டுள்ளோம். அதில் பாம்புகள் துரத்தி துரத்தி பழிவாங்கும். ஆனால் உண்மையிலேயே இந்த சம்பவம் நடைபெறும்போது மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.