உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை உருவாக்கிய இந்தியா !! மின்சக்தி தயாரிப்பில் புதிய அற்புதம் !!

0
80

உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை உருவாக்கிய இந்தியா !! மின்சக்தி தயாரிப்பில் புதிய அற்புதம் !!

உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மரத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமம்- மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளது.

துர்காபூரிலுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுமம் ,மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி கழக குடியிருப்பு காலனியில் இந்த சூரியசக்தி மரத்தை அமைக்கப்பட்டு, 11.5Kwb அதிகமாக மின்சாரம் உருவாக்க இயலும் என கூறியுள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு 12,000 முதல் 15,000 யூனிட்டுகள் மின்சக்தியை உருவாக்கிய இழுமென கூறியுள்ளது.

இதற்குக் கீழே மிக குறைந்தபட்ச நிழல் பகுதி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரத்திலும் சுமார் 35 சோலார் பி பி பேனல்கள் பொருத்தப்பட்டு 330wb திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய சக்தி பேனல்களை தாங்கிக் கொண்டிருக்கும் கை போன்ற அமைப்புகள் வளையும் தன்மை கொண்டதாகவும், தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள இயல்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஏதுவாக அமைந்துள்ளது. மின்சக்தி உற்பத்தியின் விவரங்களை உடனுக்குடன் கண்காணிக்க பேனல்கள் உதவுகிறது.

இந்த மின்சக்தி மரமானது உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மரம் மட்டுமின்றி ,எந்த இடத்திலும் பொருந்தக் கூடிய அளவிற்கு தனிப்பட்ட சில அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் இதனை பயன்படுத்தி இ-பாம்புகள் , இ-டிராக்டர்கள், இ-டிமிங் , இ-மின் மீட்டர்கள் போன்ற பலவிதமான பயன்பாடுகளுக்கும் இந்த சூரியசக்தி மரங்களை கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு சூரியசக்தி மரமும் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவையாகும். அவற்றுள் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வர்த்தக மாதிரியான பிரதான் மந்திரி கிசான் , ஜனாஸா என்ற திட்டத்தின் இணைந்து இதனை செயல்ப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதனால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அடிப்படையிலான எனர்ஜியை கிரிட் மூலம் சேமிக்க இயலும் என்றும், எரிசக்தி சார்ந்த கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மிக சிறந்த வழியாக இது அமையும் என்று கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K