அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்தால் ஆட்டின் மதிப்பு குறைந்து விடும் – சினேகன்…!!!

0
273
#image_title

பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பாடலாசிரியர் சினேகன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேச சுற்றி இருந்த தொண்டர்கள் ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி என்று கூச்சலிட்டுள்ளனர்.

உடனே சினேகன், “தயவு செய்து இனிமேல் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைக்காதீங்க. ஏனெனில் ஆட்டுக்குட்டிக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதை கெடுக்க வேண்டாம். எந்த ஆட்டுக்குட்டியும் கொண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யாது. அதன் எஜமானர் யார் என்பது நன்றாகவே தெரியும். அடுத்தவர்களை போட்டு கொடுக்காது.

அரசியலில் தனிமனித விமர்சனம் இருக்கக் கூடாது என்று எங்கள் தலைவர் கூறியுள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கு மூளை இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யுமாறு அண்ணாமலை கூறியிருந்தார். உங்களுக்கு மூளை இல்லை என்பதற்காக அப்படி சொன்னீர்களா? அல்லது நீங்கள் படித்த புத்தகத்தில் ஒன்றில் கூட மூளை குறித்து இல்லையா?

எப்படி மூளை பற்றி பேசுவதற்கு மூளை இருக்க வேண்டுமோ அதேபோல ஒருவர் குறித்து பேசுவதற்கு ஒரு அருகதை இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை யாரையும் இதுபோன்ற தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் நாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிப்பீர்கள்” என்று மிகவும் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Previous articleஅமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next article2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!