திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பல மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கால்நடைகளை வளர்த்து பராமரிப்பதோடு, அதனை விற்பனை செய்கிறார்கள். ஆகவே வீடுகளிலேயே பண்ணைகள் உருவாக்கி கோழி ஆடு போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் கால்நடைகளுக்கு இடையே ஒரு புதிய நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல பண்ணைகளில் கோழிகள் இறந்து போவதாக சொல்கிறார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை துறை அதிகாரிகள், அந்த பகுதிக்கு சென்று இறந்துபோன கோழிகளை ஆய்விற்கு, உட்படுத்த எடுத்துச் சென்று இருக்கிறார்கள். பரிசோதனைக்கு பின்னரே, கோழிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும். என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.