கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை – வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

0
72

தமிழக அரசின் வீட்டுமனை திட்டத்தின் கீழ் 3 சென்ட் இலவச மனை பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள,  பெத்தாளபள்ளி கிராமத்தில், சுமார் 200 நபர்களிடம் கடந்த மூன்று வருடங்களாக இலவச வீட்டு மனைகள் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பணம் மட்டுமன்றி அந்த மக்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இதுபோன்ற போராட்டங்களுக்கு  வரவழைத்து உள்ளதும் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் விவசாய மசோதா சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில், இந்த மக்களை கலந்துகொள்ள வைத்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஸ்டாலின் பாபு என்பவர்.

ஸ்டாலின் பாபு என்பவரே இவை அனைத்தும் செய்ததாக மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கிராம மக்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் வேனில் ஏற்றி சென்று பின்னர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நடந்தவற்றை கூறி மனு கொடுத்துள்ளனர். அங்கே வந்திருந்த தாய்மார்கள் ஸ்டாலின் பாபு தங்களை அவதூறாக பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் கைக்குழந்தையை தூக்கி வந்த பெண்கள், ஆட்சியரிடம் தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K