கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!

0
77
So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!
So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

  • சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 31, 2024ம் ஆண்டு வரை 53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
  • 2024ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொதுமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது.
  • சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
  • சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024ம் ஆண்டில் மட்டும் 52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள்.
  • 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் 41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
  • 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
  • அதேபோல், ​2019ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020ம்ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், கடந்த 2024ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.
  • ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு(QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
  • மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி., என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Previous articleதமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!
Next articleகே எல் ராகுல் vs சுப்மன் கில்.. யார் 3 வது வரிசையில் இறங்குவது?? குழப்பத்தில் நிர்வாகம்!!