வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!!

0
110
So many crores for just 15 minutes
So many crores for just 15 minutes

வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!!

தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த கமல் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மணிரத்னத்தின் தக் லைஃப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுதவிர கமல் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், கமல் தயாரிப்பில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வேறு தயாராகி வருகின்றன.

இப்படி பிசியாக இருக்கும் கமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி, பாகுபலி மூலம் பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்த நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் இந்த படத்தில் நடிகர் கமல் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்திய தகவலின்படி கமல் இந்த படத்தில் வில்லன் கிடையாதாம். படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதைவிட முக்கியம் இவரின் சம்பளம் தான். இதை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்ல திரைபிரபலங்கள் பலரும் கூட ஷாக்காகி வருகிறார்கள்.

அதன்படி கல்கி படத்தில் கமலின் கேரக்டர் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தான் திரையில் வருமாம். இந்த 15 நிமிட காட்சியில் நடிப்பதற்காக கமல் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இதை கேட்டு பலரும் ஷாக்காகி வருகிறார்கள். ஒரு முழு படத்திற்கே இங்கு பல ஹீரோக்கள் இதை விட குறைவான தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்கள். அப்படி உள்ள நிலையில், வெறும் 15 நிமிடத்திற்கு இவ்வளவு பெரிய தொகை அதிகம் என்று கூறி வருகிறார்கள்.