சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

0
289

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

 

சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது.

மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும் மற்றும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மேலும்

குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் என்பது சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் சுரைக்காய் பயன்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

 

Previous articleதாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!
Next articleகடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..