இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

0
49
So many gold medals? Students? Congratulations Governor!
So many gold medals? Students? Congratulations Governor!

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

எப்போதுமே மாணவர்களை விட படிப்பில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெறுவார்கள். இதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அடுத்து கடந்த வருடம் அனைவரும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடப் தக்கது.

என்னதான் தேர்வானாலும், தேர்ச்சி பெற்றாலும், நம் நாட்டில் மதிப்பெண்களை வைத்தே திறமைகளை கணிக்கின்றனர். எனவே அதிக மதிப்பெண் யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கும். தேர்ச்சி அடையா விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அதிக மதிப்பெண்கள் வாங்கி ஒரு மதிப்பெண் அல்லது இரண்டு மதிப்பெண் குறைவாக உள்ளோருக்கு வருமே ஒரு ஆதங்கம். அதை யாராலும் விவரிக்க முடியாது.

அது போல் தான் பதக்கங்களும் மூன்று பிரிவுகளில், மூன்று விதமான பதக்கங்கள் இருந்தாலும், தங்க பதக்கம் வாங்குபவர்கள் தான் மிக சிறப்பானவர்களாக கொண்டாடப் படுவார்கள். அந்த வகையில், காஷ்மீரின் பல்கலையில், மாணவிகளே அதிக அளவு தங்க பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில்  துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மாணவர்களை  இரண்டு பிரிவுகளாக பிரித்து பட்டமளிப்பு விழா நடந்தேறியது. முதல் பிரிவில் மொத்தம் 58 பேர் தங்கப் பதக்கங்களை பெற்றனர். அவர்களில் 42 பேர் மாணவிகள் என்றும் தெரிவித்தனர்.

இதே போன்று இரண்டாவது பிரிவில் 72 மாணவர்களும், 240 மாணவிகளும் தங்கப் பதக்கங்களை பெற்று கொண்டனர். மேலும் இதுபற்றி அவர் கூறும் போது, பெண்களை சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் வலிமையுள்ளவர்களாக ஆக்குவது என்பது மிக முக்கியம். ஆச்சரியப்படத்தக்க வகையில் சாதனை படைத்த பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.