இந்த பொருளில் இவ்வளவு சத்துக்களா? தெரிந்தால் இனி இதை தூக்கி போட மாட்டீர்கள்…!

0
135

இந்த பொருளில் இவ்வளவு சத்துக்களா? தெரிந்தால் இனி இதை தூக்கி போட மாட்டீர்கள்…!

நாம் அன்றாடம் சமையலில் சிறிய அளவிலே பயன்படுத்தப்படும் கருவேப்பிலையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலானோர் கருவேப்பிலையை பச்சையாக வாயில் இட்டு சுவைப்பார்கள். இதில் பல்வேறு நற்குணங்கள் உள்ளது.

கருவேப்பிலையில் நிறைய அளவிலான சத்துப் பொருட்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

தினமும் காலையில் 3 முதல் 4 பச்சை இலைகளை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம் கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கண் பார்வையை மேம்படுத்தலாம்

கருவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் பார்ப்போம்….

கருவேப்பிலை நீரிழிவு நோய் நோயாளிகள் அடிக்கடி சாப்பிடலாம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

கருவேப்பிலை பலவகையான தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் அபாயத்தை குறைக்கிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்தும்.

கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும் கருவேப்பிலையை ஜூஸ் செய்து தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடை நன்றாக குறையும்.

மேலும் கறிவேப்பிலையை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலை எண்ணெய் தேய்த்து வருவதால் முடி கருகரு எனவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

Previous articleவேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை! மாவட்ட நிர்வாகம் அழைப்பு!
Next articleஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…!