உலர் பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது.இதில் கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)கருப்பு உலர் திராட்சை – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் கிண்ணம் ஒண்றில் கருப்பு உலர் திராட்சை ஐந்து போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் உலர் திராட்சையில் ஒட்டியிருந்த அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.
பிறகு கிண்ணத்தில் உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் திராட்சை ஊறவைத்த நீரை பருகிவிட்டு திராட்சையை சாப்பிடலாம்.
இப்படி தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு பலவித ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகள் தவிர மற்றவர்கள் தினமும் இருப்பது ஐந்து உலர் திராட்சை சாப்பிடலாம்.
இந்த கருப்பு உலர் திராட்சையை பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.அதேபோல் அரைத்து தேன் கலந்தும் சாப்பிட்டு வரலாம்.
காலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் உலர் திராட்சை பானம் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உலர் திராட்சை பயன்கள்:-
1)இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உலர் திராட்சையில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
2)உலர் திராட்சை சாப்பிடுவபவர்களுக்கு இரத்த சோகை பாதிப்பு வராமல் இருக்கும்.உலர் திராட்சையில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
3)கண் பார்வை திறனை மேம்படுத்த,கண் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.
4)பொட்டாசியம் சத்து நிறைந்த உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இதய தசைகள் வலிமை அடைய உலர் திராட்சை பானத்தை பருகலாம்.
5)உடலுக்கு புத்துணர்வு கிடைக்க உலர் திராட்சை பானத்தை பருகலாம்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.
6)குடல் கழிவுகள் வெளியேற உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.